அரசியல்
Now Reading
ராகுலும், அகிலேஷும் ஒன்றிணைந்து தேர்தல் பிரச்சாரம்
0

ராகுலும், அகிலேஷும் ஒன்றிணைந்து தேர்தல் பிரச்சாரம்

by editor sigappunadaFebruary 28, 2017 10:46 am

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 5வது கட்ட தேர்தல் நிறைவு பெற்றது. வருகிற மார்ச் மாதம் 4ஆம் தேதி 6ஆம் கட்ட தேர்தலும், 8ஆம் தேதி 7ஆம் கட்ட தேர்தலும் நடைபெறவுள்ளது. 7ஆம் கட்ட தேர்தலின்போது வாரணாசி தொகுதியில் ஓட்டுப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தொகுதியானது பிரதமர் நரேந்திர மோடி வெற்றிபெற்ற நாடாளுமன்ற தொகுதியாகும்.

வாரணாசி தொகுதியில் 2014ஆம் ஆண்டு பெற்ற வாக்குகளைவிட, அதிக ஓட்டுகள் பெற்றுவிட வேண்டும் என்பதில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மிகவும் தீவிரமாக உள்ளனர். இதற்காக வாரணாசி தொகுதியை முற்றுகையிட்டு பாஜக-வினர் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியும் இந்த வாரம் வாரணாசிக்கு வந்து அதிரடி பிரச்சாரம் செய்யத் திட்டமிட்டுள்ளார். அவரது பிரச்சார தேதி இன்னமும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. என்றாலும் பிரதமர் மோடி வாரணாசியில் ரோடு-ஷோ நடத்த திட்டமிட்டு வருகிறார். பாதுகாப்புப் படையினர் ஒப்புதல் அளித்ததும் பிரதமர் மோடி வாரணாசியில் எந்தப் பகுதியில் ரோடு-ஷோ நடத்தப் போகிறார் என்பது தெரியவரும். ரோடு-ஷோ தவிர, காசி விஸ்வநாதர் ஆலயம் உள்பட சில கோவில்களுக்குச் செல்லவும் பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்துள்ளார். மோடியின் இந்த புயல்வேகப் பிரச்சாரத்துக்கு உரிய பதிலடி கொடுக்க அகிலேஷ்-ராகுல் இருவரும் திட்டமிட்டுள்ளனர்.

வாரணாசியில் இன்று ராகுலும், அகிலேஷும் ஒன்றிணைந்து தேர்தல் பிரச்சாரம் செய்யவும், ரோடு ஷோ நடத்தவும் திட்டமிட்டிருந்தனர். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டநிலையில் திடீரென அந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

பிரதமர் மோடி ரோடு-ஷோ நடத்திவிட்டுச் சென்றபிறகு அதே பகுதியில், அதே மாதிரி ரோடு-ஷோ நடத்த ராகுல்- அகிலேஷ் இருவரும் முடிவு செய்துள்ளனர். இதனால் வாரணாசி தேர்தல் பிரச்சாரம் பாஜக, சமாஜ்வாடி இடையே கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response