மாவட்டம்
Now Reading
ரயிலை சிறைபிடித்த 1000 பேர் மீது வழக்கு பதிவு
0

ரயிலை சிறைபிடித்த 1000 பேர் மீது வழக்கு பதிவு

by editor sigappunadaJanuary 25, 2017 4:59 pm

,

ஜல்லிக்கட்டு போராட்டத்தில், சேலம் ரயிலை சிறைப் பிடித்து சேதப்படுத்தியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரச் சட்டம் வேண்டும் என்று தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பல்வேறு இடங்களில் ரயில் மறியல் செய்யப்பட்டது. குறிப்பாக சேலம், மதுரை ரயில் நிலையங்களில் ரயில்கள் சிறைப் பிடிக்கப்பட்டது.

சேலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாணவர்கள், இளைஞர்கள் உள்பட பலர் போராட்டம் நடத்தினர். இதைத்தொடர்ந்து, கடந்த 19ஆம் தேதி மாணவர்கள் பெங்களூரு–காரைக்கால் பயணிகள் ரயிலை சிறைப் பிடித்தனர். ரயில்மீது ஏறியும் மறித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரயில் என்ஜின் மற்றும் இருக்கைகளை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. எனவே, சேலம் ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 1000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தடை செய்யப்பட்ட பகுதியில் தண்டவாளத்தைக் கடந்து செல்லுதல், ரயில் மறியல் செய்தல், ரயிலுக்கு இடையூறாக தண்டவாளத்தில் கற்கள் வைத்தல், ரயிலை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ரயில் என்ஜின், பெட்டிகளின் கண்ணாடி உடைக்கப்பட்டும், இருக்கைகளைக் கிழித்தும் சேதப்படுத்தப்பட்டிருந்தன. இதன் சேதமதிப்பு சுமார் ரூ.68 லட்சம் என்று கூறப்படுகிறது.

ரயில் என்ஜின், சேதத்தை சீர்படுத்த கர்நாடக மாநிலம் கிருஷ்ணராஜபுரத்தில் உள்ள ரயில் லோகோ செட்டுக்கு கொண்டு செல்லப்படுகிறது. 16 ரெயில் பெட்டிகளும் பெங்களூரு அருகே உள்ள யஸ்வந்த்பூர் ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்த வழக்கு சேலம் ரயில்வே துறையினரிடமிருந்து, செவ்வாய்ப்பேட்டை காவல் துறையினருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தேடத் தொடங்கியுள்ளனர். ரயில் சேதப்படுத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோ காட்சிகளை வைத்து சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யபடவுள்ளனர். மாணவர்கள் ரயிலை சேதப்படுத்தினார்களா அல்லது சமூக விரோதிகளா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response