மாவட்டம்
Now Reading
மோடி விழாவில் மேடையை நோக்கி ஓடி வந்த பெண்
0

மோடி விழாவில் மேடையை நோக்கி ஓடி வந்த பெண்

by editor sigappunadaMarch 9, 2017 11:05 am

மகளிர் தினத்தை முன்னிட்டு குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடந்த பெண் பஞ்சாயத்து தலைவர்களை கவுரவித்து விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு விருதுகளை வழங்கி உரையாற்றினார்.

அவர் பேசிக்கொண்டிருக்கும்போது, ஒரு பெண் திடீரென எழுந்து, ஏதோ பேசியபடி விறுவிறுவென மேடையை நோக்கிச் சென்றார். ஆனால், அதற்குள் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி, வெளியே இழுத்துச் சென்றனர். இதனால் விழா அரங்கில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

விசாரணையில், மோடியின் நிகழ்ச்சிக்கு இடையூறு ஏற்படுத்த முயன்ற அந்தப் பெண், உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஷாலினி என்றும், கவுதம புத்தர் நகர் பஞ்சாயத்து தலைவர் என்பதும் தெரியவந்தது. மாநில அரசு தனக்கு எந்த உதவியும் செய்யாத நிலையில், தான் சந்திக்கும் சிரமங்கள் குறித்து பிரதமரிடம் தெரிவிக்க விரும்பியதாக ஷாலினி கூறினார்.

விழாவில் பேசிய பிரதமர் மோடி, பெண் பஞ்சாயத்து தலைவர்களின் பணிகளை பாராட்டியதுடன், கிராமப்புற இந்தியாவில் நேர்மறையான மாற்றம் தொடங்கியதை அவர்கள் காண்பித்திருப்பதாக தெரிவித்தார். பெண் சிசுக் கொலையை எந்த இடத்திலும் அனுமதிக்க முடியாது என்றும், மாணவ மாணவிகள் சம அளவில் கல்வி அறிவு பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மோடி பேசினார்.

இதையும் படிச்சிருங்க !
ரஜினி கொடும்பாவியை எரித்த சிலர் போயஸ் கார்டனில் பரபரப்பு - சென்னை செம்மொழி பூங்கா பகுதியில் நடிகர் ரஜினிகாந்தின் கொடும்பாவியை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் முன்னேற்றப் படையைச் சேர்ந்தவர்களைப் போலீஸார் கைது செய்தனர். முன்னதாக, ரஜினிகாந்த் வீட்டுக்கு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response