சினிமா
Now Reading
மே மாதம் வெளியாகிறது ‘நெஞ்சம் மறப்பதில்லை
0

மே மாதம் வெளியாகிறது ‘நெஞ்சம் மறப்பதில்லை

by editor sigappunadaApril 4, 2017 12:55 pm

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்துக்கு தணிக்கையில் ‘யு/ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. மே மாதம் வெளியாகிறது.

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, நந்திதா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. யுவன் இசையமைத்துள்ள இப்படத்தை கவுதம் மேனன் தயாரித்துள்ளார். எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் இப்படத்தை வெளியிடவுள்ளது.

நீண்ட நாட்களாக இப்படம் தயாரிப்பில் இருந்து வருகிறது. இப்படத்தைத் தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடிக்கும் ‘மன்னவன் வந்தானடி’ படத்தைத் தொடங்கினார் செல்வராகவன். தற்போது அமெரிக்காவில் நடைபெறவுள்ள இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக தயாராகி வருகிறது படக்குழு.

‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு. முதலில் ‘ஏ’ சான்றிதழ் கிடைக்கவே, மறுதணிக்கைக்கு சென்றார்கள். மறுதணிக்கையில் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டது.

தணிக்கை பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து மே மாதத்தில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதையும் படிச்சிருங்க !
ரஜினி கொடும்பாவியை எரித்த சிலர் போயஸ் கார்டனில் பரபரப்பு - சென்னை செம்மொழி பூங்கா பகுதியில் நடிகர் ரஜினிகாந்தின் கொடும்பாவியை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் முன்னேற்றப் படையைச் சேர்ந்தவர்களைப் போலீஸார் கைது செய்தனர். முன்னதாக, ரஜினிகாந்த் வீட்டுக்கு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response