அரசியல்
Now Reading
மேலும் ஒரு எம்.எல்.ஏ. ஓ.பி.எஸுக்கு ஆதரவு
0

மேலும் ஒரு எம்.எல்.ஏ. ஓ.பி.எஸுக்கு ஆதரவு

by editor sigappunadaMarch 13, 2017 9:50 am

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அருண்குமார் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு, அதிமுக சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என இரு அணியாக உள்ளனர். நம்பிக்கை வாக்கெடுப்பில் தங்களின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பன்னீர்செல்வம் அணியினருக்கு மாறிவிடாமல் இருக்க சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் கூவத்தூர் விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு அன்று கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., அருண் குமார் கூவத்தூரில் இருந்து வெளியேறி, அதிமுகவில் குடும்ப ஆதிக்கம் மிகுந்துள்ளது. அதனால், நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிப்பதாக அறிவித்தார்.

இந்நிலையில், ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து நம்பிக்கை தீர்மானத்தில் பழனிச்சாமிக்கு எதிராக வாக்களித்த எம்.எல்.ஏ ஆருகுட்டி, மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., சின்னராசு மற்றும் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் புறகணித்த மேற்கு வடக்கு தொகுதி எம்எல்ஏ அருண்குமார் ஆகிய மூவரையும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவிக்க வைக்க திவாகரன் பேச்சு வார்த்தைகளை நடத்தி வந்தார். அவர்களோ, கட்சியின் துணை பொது செயலாளரான டி.டி.வி. தினகரன் பேசினால் ஆலோசிப்போம் என்று கூறிவிட்டனராம். ஆனால், டி.டி.வி தினகரனோ ஏனோ அதற்கான தீவிர முயற்சியில் இறங்கவில்லையாம்.

ஜெயலலிதா பிறந்த நாளன்று இம்மூவரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவிக்க நடைபெற்ற முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. தற்போது அருண் குமார், வெளிப்படையாக ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால் சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு எதிராக திமுக கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு வலுக்கூடி வருகிறது. அருண் குமாரை தொடர்ந்து மேலும் சில எம்.எல்.ஏ.,க்கள் பன்னீரை ஆதரிக்க தயார் செய்யப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிச்சிருங்க !
ரஜினி கொடும்பாவியை எரித்த சிலர் போயஸ் கார்டனில் பரபரப்பு - சென்னை செம்மொழி பூங்கா பகுதியில் நடிகர் ரஜினிகாந்தின் கொடும்பாவியை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் முன்னேற்றப் படையைச் சேர்ந்தவர்களைப் போலீஸார் கைது செய்தனர். முன்னதாக, ரஜினிகாந்த் வீட்டுக்கு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response