க்ரைம்
Now Reading
மெரீனாவில் தடையை மீறி போராட்டம்: ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு
0

மெரீனாவில் தடையை மீறி போராட்டம்: ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு

by editor sigappunadaFebruary 19, 2017 10:38 am

சென்னை மெரீனாவில் தடையை மீறி போராட்டம் நடத்தியதாக ஸ்டாலின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

 


சட்டசபையில் நேற்று நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி திமுகவினர் ரகளையில் ஈடுபட்டனர். இதனையடுத்து திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

அப்போது ஸ்டாலின் உள்ளிட்டோர் அவைக்காவலர்களால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

திமுகவினர் வெளியேற்றப்பட்டதைக் கண்டித்தும், வாக்கெடுப்பை செல்லாது என அறிவிக்கக்கோரியும் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தினர்.

பின்னர் அனைவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்னர். இந்நிலையில், மெரீனா கடற்கரையில் சட்டவிரோதமாக கூடியது, தடைசெய்யப்பட்ட பகுதியில் போராட்டம் நடத்தியது போன்ற பிரிவுகளின் கீழ் ஸ்டாலின் உள்ளிட்ட 2000 திமுகவினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response