ஸ்பெஷல்
Now Reading
மெரினாவை நோக்கி படையெடுக்கும் கல்லூரி மாணவர்கள்
0

மெரினாவை நோக்கி படையெடுக்கும் கல்லூரி மாணவர்கள்

by editor sigappunadaJanuary 18, 2017 1:43 pm

 

 

 

14847224580779

5BF8565B-BAA1-4DA3-83B0-76D3B8A6ACF_L_styvpf

 

ஜல்லிக்கட்டு தொடர்பாக முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று காலை விரிவான அறிக்கை வெளியிடுவார் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலையில் இருந்து சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களது வகுப்புகளை புறக்கணித்துவிட்டு மெரினா கடற்கரையில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றவண்ணம் உள்ளனர்.

இதுதவிர, சென்னை நகரின் பல பகுதிகளில் வசிக்கும் இளைஞர்கள், பொதுமக்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் லாரி மற்றும் வேன்களில் ஏறி மெரினா கடற்கரையை நோக்கி படையெடுத்து வருகின்றனர். நகரின் பல முக்கிய சாலைகளில் கருப்பு சட்டை அணிந்தபடி செல்லும் மக்களை சுமந்தபடி மெரினாவை நோக்கி செல்லும் வாகனங்களை பார்க்க முடிந்தது.

காலை 10.30 மணி நிலவரப்படி மெரினா கடற்கரை சாலை முழுக்க மக்கள் தலைகளாகவே காணப்படுகின்றன. நடிகர் மன்சூர் அலிகான், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட சில திரை பிரபலங்களும் இங்கு குவிந்துள்ளதால் இன்றைய போராட்டத்தில் எழுச்சி ஏற்பட்டுள்ளது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response