க்ரைம்
Now Reading
மெரினாவுக்கு செல்லும் அனைத்து வழிகளும் அடைப்பு!!
0

மெரினாவுக்கு செல்லும் அனைத்து வழிகளும் அடைப்பு!!

by editor sigappunadaJanuary 23, 2017 10:46 am

மெரினாவில் உள்ள போராட்டக்காரர்களுக்கு யாரும் சென்று ஆதரவு அளிக்காத வகையிலும், மெரினா கடற்கரையில்  உள்ளவர்களை வெளியேற்றுவதற்காகவும், மெரினா செல்லும் அனைத்து வழிகளையும் காவல்துறையினரால் அடைக்கப்பட்டுள்ளது.

மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை வெளியேற காவல்துறையினர் உத்தரவிட்டனர். ஆனால், அவர்கள் மறுத்ததால் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

இதனால், கோபமடைந்த போராட்டக்காரர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து, மெரினாவில் உள்ளவர்களை தாங்களாகவே கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் அறிவிறுத்தினர்.

மேலும், மெரினாவில் கூட்டம் சேராமல் இருக்க மெரினா கடற்கரைக்கு செல்லும் அனைத்து பாதைகளும் முடக்கப்பட்டுள்ளது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response