விளையாட்டு
Now Reading
மெரினாவில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி
0

மெரினாவில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி

by editor sigappunadaJanuary 19, 2017 10:15 am

1484750923-832

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மெரினா கடற்கரையில் கடந்த மூன்று இரவு பகல் பாராமல் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமைதியாக அறவழியில் சென்று கொண்டிருந்த போராட்டத்தில் நேற்று இரவு 8 மணிக்கு திடீரென போலீசார் அதிகளவு குவிக்கப்பட்டனர். சாலையில் கூடியிருந்தவர்கள் மீது லத்தியால் போலீசார் லேசான தடியடி நடத்தினர்.

இதில் காவலர் மற்றும் போராட்டக்காரர்கள் சிலர் காயம் அடைந்துள்ளனர். போலீசார் மீது தண்ணீர் பாட்டில்கள் வீசியதால் தடியடி நடத்தப்பட்டதாகவும், வேடிக்கை பார்க்க வந்தவர்களை அப்புறப்படுத்தும் போது லேசான தடியடி நடத்தியதாகவும் போலீசார் கூறுகின்றனர். அமைதியாக போராட்டம் நடத்தினால் காவல்துறை உரிய பாதுகாப்பை அளிக்கும் என தெரிவித்துள்ளது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response