அரசியல்
Now Reading
முற்றும் முதல்வர் -கவர்னர் மோதல்
0

முற்றும் முதல்வர் -கவர்னர் மோதல்

by editor sigappunadaJanuary 5, 2017 3:48 pm

 

14831510

இந்தியாவில் 7 யூனியன் பிரதேசங்கள் உள்ளன. மற்ற மாநிலங்களைப் போல முதலமைச்சர்களே நிர்வாகத்தை நடத்திச் செல்வார்கள் எனும் நிலையில், யூனியன் பிரதேசங்களில் எல்லா மாநிலங்களுக்கும் ஆளுநர்களை நியமிப்பது போல யூனியன் பிரதேசங்களுக்கும் நியமித்து வருகிறது மத்திய அரசு. அப்படி ஆளும் பாஜக அரசால் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு கிரண் பேடி நியமிக்கப்பட்டார். இந்நிலையில், சமூக வலைத்தளங்கள் மூலம் அரசுத் தகவல்களை அனுப்ப வேண்டாம் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வெளியிட்ட உத்தரவை தன் அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்திருக்கிறார் ஆளுநர் கிரண் பேடி.

சில நாட்களுக்கு முன்பு, கவர்னர் கிரண்பேடி அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்காக வாட்ஸ்-அப் குரூப் தொடங்கி இருந்தார். இந்த வாட்ஸ்-அப்பில் கூட்டுறவு பதிவாளர் ஆபாச படம் அனுப்பியதால் சர்ச்சை ஏற்பட்டது.அந்த அதிகாரி மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்ட நிலையில், இது அதிகாரிகள் VS கவர்னர் என்று மாறியது. இதையடுத்து டெல்லி சென்ற கிரண்பேடி இது தொடர்பாக உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் புகார் கொடுத்தார்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது தொடர்பாக நாராயணசாமி போட்ட உத்தரவை அரசு கீழ்நிலை செயலாளர் கண்ணன் அனைத்து அதிகாரிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். இந்த சுற்றறிக்கையின் மூலம் கவர்னர் கிரண்பேடி உருவாக்கிய வாட்ஸ் அப் குரூபும் பாதிக்கப்பட்டது. அந்த வாட்ஸ் அப் குரூப்பில் இருந்த அதிகாரிகள் மொத்தமாக விலக அவர் உருவாக்கிய வாட்ஸ் அப் குழு வெறிச்சோடியது.

இதனால் கடுப்பான கிரண்பேடி தன் அதிகாரத்தை பயன்படுத்தி முதல்வர் நாராயணசாமியின் உத்தரவை ரத்து செய்ததோடு அதிகாரிகளை மீண்டும் கட்டாயப்படுத்தி வாட்ஸ் அப் குழுவில் இணைத்து வருகிறார் புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response