சினிமா
Now Reading
முரண்டு பிடித்த விஷால் இறங்கி வந்தார்
0

முரண்டு பிடித்த விஷால் இறங்கி வந்தார்

by editor sigappunadaJanuary 5, 2017 12:40 pm

பரபரப்பாக நடைபெற்றுவந்த திரைப்பட தயாரிப்பாளர் சங்கப் பிரச்னைகள் இப்போது முடிவை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றன. நல்ல முடிவு தான்.

போண்டா பஜ்ஜி சாப்பிட்டுவிட்டு கட்டப்பஞ்சாயத்து ஸ்டைலில் சங்க கூட்டங்கள் நடைபெறுகிறது என விஷால் பேசிய பேச்சுக்கு, சங்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட விஷால், தயாரிப்பாளர் சங்கத்தின் இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு  விசாரணைக்கு வந்தபோது, சங்கத்தைப் பற்றி தவறாக பேசியதற்கு நான் வருத்தம் தெரிவிக்கிறேன் என்று விஷால் வருத்தம் தெரிவித்த கடிதம் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டது.

அதன்பிறகு வாதாடிய எதிர்தரப்பு வழக்கறிஞர் விஷால் வருத்தம் தெரிவித்துவிட்டதால், இந்த வழக்கை ரத்து செய்துவிடுமாறும், சங்கத்தின் செயற்குழுவைக் கூட்டி பிரச்னையை முடித்துக்கொள்கிறோம் என்றும் நீதிமன்றத்தில் கோரிக்கையை வைத்தார். ஆனாலும், இந்த வழக்கை இரண்டு நாட்களுக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response