மாவட்டம்
Now Reading
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆளுநருக்கு ஆலோசனை
0

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆளுநருக்கு ஆலோசனை

by editor sigappunadaFebruary 10, 2017 11:30 am

சசிகலாவுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது தொடர்பான பிரச்சனையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்தியாசார் ராவுக்கு, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து ப.சிதம்பரம் தனியார் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு தங்களது சட்டப்பேரவை குழு கட்சி தலைவரை தேர்வு செய்ய எல்லா உரிமையும் உள்ளது. அந்த தலைவருக்கு முதல்வர் பதவிக்கான தகுதி உள்ளதா என்று கேட்க தமிழக மக்களுக்கும் உரிமை உள்ளது. அதைத்தான் ஆளுநரும் கேட்க வேண்டும்.

ஒருவேளை, சசிகலா தகுதியானவர் என மீண்டும் வலியுறுத்தப்பட்டால், ‘நல்லது. நான் உங்கள் கருத்துகளை கவனத்தில் எடுத்துக் கொள்கிறேன். நான் அரசியல் சட்ட நிலைப்பாட்டையும், நெறிமுறையையும் பார்த்து முடிவு எடுக்க வேண்டி உள்ளது. ஆகவே, சிறிது நாட்கள் பொறுத்திருங்கள்’ என்று ஆளுநர் கூற வேண்டும்.

ஏனென்றால், உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு தேதி நெருங்கி வருகிறது. அதுவரை ஆளுநர் காத்திருக்க வேண்டும். அவர் உடனடியாக சசிகலாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்ற அரசியல் சட்ட கட்டுப்பாடு எதுவும் இல்லை. ஒருவேளை, சசிகலாவுக்கு தகுதியிழப்பு ஏதும் ஏற்படாவிட்டால், அப்போது அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டிய கடமை, ஆளுநருக்கு உள்ளது என்று தனது யோசனை தெரிவித்துள்ளார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response