மாவட்டம்
Now Reading
முன்னாள் அமைச்சர் வி.எம்.சி.சிவக்குமார் கொலையில் எழிலரசி கோர்ட்டில் சரண்
0

முன்னாள் அமைச்சர் வி.எம்.சி.சிவக்குமார் கொலையில் எழிலரசி கோர்ட்டில் சரண்

by editor sigappunadaJanuary 23, 2017 1:24 pm

புதுவை முன்னாள் அமைச்சர் வி.எம்.சி.சிவக்குமார் கடந்த மாதம் காரைக்காலில் உள்ள நிரவியில் படுகொலை செய்யப்பட்டார்.
காரைக்காலை சேர்ந்த சாராய வியாபாரி ராமுவின் மனைவி எழிலரசி கூலிப்படையை ஏவி சிவக்குமாரை கொலை செய்தது தெரியவந்தது.
சாராய வியாபாரி ராமு 2 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இதற்கு வி.எம்.சி.சிவக்குமார் உடந்தையாக இருந்ததாக கருதி எழிலரசி இந்த கொடூர செயலை செய்தார்.

 கொலையாளிகளை பிடிக்க போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் 4 பேர் புதுவை கோர்ட்டில் சரண் அடைந்தனர். எழிலரசி மட்டும் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
எழிலரசி இன்று காலை திடீரென புதுவை கோர்ட்டுக்கு வந்தார். அவர் 2-வது ஜூடீசியல் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் சரண் அடைந்தார்.இந்த கொலையில் மேலும் பலர் சம்பந்தப்பட்டுள்ளனர். அவர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response