மாவட்டம்
Now Reading
முதியோர் உதவித் தொகைக்கு கமிஷன் கேட்பதாக புகார்
0

முதியோர் உதவித் தொகைக்கு கமிஷன் கேட்பதாக புகார்

by editor sigappunadaDecember 27, 2016 10:22 am

220px-elder_2

தமிழகம் முழுவதும் முதியோர் உதவித் தொகைக்கு கமிஷன் கேட்பதாக புகார் எழுந்துள்ளது. தகுதி வாய்ந்த முதியோருக்கு அரசு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கி வருகிறது.

அப்பணத்தை வங்கிக்கணக்கில் செலுத்தினால் யாராவது ஏமாற்றக்கூடும் என்ற அடிப்படையில் சிறப்பு முகாம் மூலம் தகுதியானவர்களிடம் அத்தொகை வழங்கப்படுகிறது.

இவ்வாறு சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் நடைபெற்ற முகாமில் ரூ.2000க்கு ரூ.60 கழித்துக்கொண்டு உதவித்தொகை வழங்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

ரூபாய் பிடித்தம் குறித்து கேட்டால் மிரட்டப்படுவதாகவும், அலைக்கழிக்கப்படுவதாகவும் முதியோர் வேதனை தெரிவித்துள்ளனர்.

மேலும் அடையாள அட்டை லாமினேஷனுக்கு கூடுதல் தொகை வசூலிப்பதாகவும், முறைகேடு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிச்சிருங்க !
பிரியாணிக்கான சண்டையால் நின்று போன திருமணம் - பெண் வீட்டார் அசைவ உணவை வழங்காததால் ஏற்பட்ட பிரச்சினையில், மீரட்டின் முஸாஃபர் நகர் கிராமத்தில் நடைபெற இருந்த திருமணம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்துத் திருமணப் பெண் நக்மா Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response