ஸ்பெஷல்
Now Reading
முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு திடீரென்று கூடுதல் பாதுகாப்பு!
0

முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு திடீரென்று கூடுதல் பாதுகாப்பு!

by editor sigappunadaFebruary 10, 2017 11:10 am

தமிழக அரசியலில் தற்போது நிலவி வரும் பரபரப்பு சூழ்நிலைகளுக்கு மத்தியில், தனிப்பட்ட பாதுகாப்புக்காக, 10க்கும் அதிகமான நபர்களை பன்னீர்செல்வமே நியமித்துக் கொண்டுள்ளார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா முதல்வராக எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் பன்னீர்செல்வம் போராட்டத்தில் குதித்துள்ளார். இந்நிலையில், அதிமுக பிரமுகர்கள் மட்டுமின்றி, பல்வேறு கட்சியினரும், பொதுமக்களும் நாள்தோறும் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பன்னீர்செல்வத்தின் இல்லத்திற்கு நேரில் வருகை தந்து ஆதரவு தெரிவித்தி வருகின்றனர்.

இதையடுத்து நாளுக்கு நாள், சசிகலாவின் தரப்பினரிடமிருந்து பன்னீர்செல்வத்திற்கு எதிர்ப்பு அதிகரித்து வருவதால், இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. .

இந்நிலையில், பன்னீர்செல்வத்தின் வீட்டிற்குப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி, தனிப்பட்ட பாதுகாப்புக்காக, 10க்கும் அதிகமான நபர்களை பன்னீர்செல்வமே நியமித்துக் கொண்டுள்ளார். போலீஸார், சசிகலாவின் பேச்சைக் கேட்டு தனக்கு எதிராக எந்நேரமும் திரும்பிவிடலாம் என்பதால், தனக்கு நெருங்கிய விசுவாசமான நபர்களை பன்னீர்செல்வம் பாதுகாப்புக்கு வைத்துக் கொண்டதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேபோன்ற தனிநபர் பாதுகாப்பு ஏற்பாடுகளை, பன்னீர்செல்வத்தின் குடும்ப உறுப்பினர்களும் செய்துகொண்டுள்ளனர். முன்னெச்சரிக்கையாக, இந்த பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response