ஸ்பெஷல்
Now Reading
முதல்வரின் அறிவிப்பை நம்பி இந்த போராட்டத்தை கை விட மாட்டோம்!
0

முதல்வரின் அறிவிப்பை நம்பி இந்த போராட்டத்தை கை விட மாட்டோம்!

by Sub EditorJanuary 20, 2017 4:21 pm

ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு ஓரிரு நாளில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று காலை அறிவித்தார். இதனால் போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டார். ஆனால் இதனை ஏற்க மறுத்து, ஜல்லிக்கட்டு நடக்கும் வரை போராட்டம் தொடரும் என இளைஞர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

அவசர சட்டம் கொண்டு வரப்படும் என முதல்வர் அறிவித்துள்ளது குறித்து போராட்ட களத்தில் இருக்கும் இளைஞர்களிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதனை ஏற்க அவர்கள் மறுத்து விட்டனர். மேலும் அவர்கள் கூறுகையில், முதல்வரின் இந்த அறிவிப்பை ஏற்க முடியாது. இது வெறும் கண்துடைப்பு. எங்களுக்கு அவசர சட்டம் வேண்டாம். நிரந்தர தீர்வு தான் வேண்டும். அனைத்து ஆண்டுகளும் தடையின்றி ஜல்லிக்கட்டு, நிரந்தரமாக நடத்தப்பட வழிவகை செய்ய வேண்டும்.

அதுவரை போராட்டம் தொடரும். நிரந்தர சட்டம் கொண்ட வரும் வரை கலைந்து செல்ல மாட்டோம். ஆனால் அவசர சட்டம் கொண்டு வருவதாக முதல்வர் அறிவித்துள்ளது உலக தமிழர்களுக்கு கிடைத்த முதல் வெற்றி. முதல்வரின் அறிவிப்பு வரவேற்கதக்கது.

ஆனால் முதல்வரின் இந்த அறிவிப்பை மட்டுமே நம்பி இந்த போராட்டத்தை கை விட மாட்டோம் என்று இளைஞர்கள், மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response