பேட்டி
Now Reading
முதல்வரிடம் பேசினேன். பிரதமரிடமும் தகவல் தெரிவித்துள்ளேன்: கமல் அறிவிப்பு
0

முதல்வரிடம் பேசினேன். பிரதமரிடமும் தகவல் தெரிவித்துள்ளேன்: கமல் அறிவிப்பு

by editor sigappunadaJanuary 23, 2017 3:13 pm

சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டக்காரர்கள் இன்று காலை வெளியேற்றப்பட்டுள்ளார்கள். இதனால் காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மெரினாவிலிருந்து வெளியேற மாணவர்களும் பொதுமக்களும் மறுத்தார்கள். இதனால் அங்கு அசாதாரண சூழல் நிலவியது.

இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் கமல் கூறியதாவது:

இதுவரை பொதுச்சொத்திற்க்கு எச்சேதமுமில்லாமல் நடந்த இப்போராட்டம்  அமைதி  இழக்கக்கூடாது. இந்தியாவின் மூத்த தலைமை ஆவன செய்ய வேண்டும். செய்யும். வீரத்தின் உச்சகட்டமே அஹிம்ஸை. அறவழிப் போராளிகள் ரத்தக் காயம் படுவது இதுவரை நிகழாததல்ல. அமைதி காக்கும் கடமை உமது. வெகுளாதிருத்தலே விவேகம். சட்டமன்றத்தில் என்ன கூறப்போகிறார்கள் என்று மாணவர் சமுதாயம் காத்திருந்தபோது அவர்கள்மீது ஏன் நடவடிக்கை எடுக்கவேண்டும்?

மாண்புமிகு தமிழக முதலமைச்சரிடம் பேசினேன். முக்கியமான கேள்வியை அவரிடம் எழுப்பினேன். அவர் விரைவில் பதில் அளிப்பார். அவர்கள் உங்களைத் திருப்திப்படுத்த ஆவலாக உள்ளார்கள். அமைதியாக இருக்கவும். என்னுடைய தொடர்புகளின் மூலம் பிரதமருக்கும் தகவல் தெரிவித்தேன். எனவே அனைவரும் அமைதி காக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

இதையும் படிச்சிருங்க !
பிரியாணிக்கான சண்டையால் நின்று போன திருமணம் - பெண் வீட்டார் அசைவ உணவை வழங்காததால் ஏற்பட்ட பிரச்சினையில், மீரட்டின் முஸாஃபர் நகர் கிராமத்தில் நடைபெற இருந்த திருமணம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்துத் திருமணப் பெண் நக்மா Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response