அரசியல்
Now Reading
முதலமைச்சர் பழனிச்சாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
0

முதலமைச்சர் பழனிச்சாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

by editor sigappunadaFebruary 27, 2017 10:42 am

நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்கக் கோரி ஸ்டாலின் தொடுத்த வழக்கில், முதலமைச்சர் பழனிச்சாமிக்கு நோட்டீஸ் அனுப்பி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக சட்டபேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்கக்கோரியும் ஆளுநரின் செயலர், தலைமைச் செயலர், தேர்தல் ஆணைய அதிகாரியின் மேற்பார்வையில், ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று, கடந்த 20ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மனு தாக்கல் செய்தார்.

இதைத் தொடர்ந்து, கடந்த 22ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது இதை விசாரித்த தற்காலிக தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷ், நீதிபதி மகாதேவன், திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களிடம் , “சட்டசபையில் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக தங்களிடம் இருக்கும் வீடியோ பதிவை முதலில் தாக்கல் செய்யுங்கள். அதன்பின்னர் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும்’’ என்று தெரிவித்து இந்த வழக்கை 27ஆம் தேதி ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று 3.3௦ மணிக்கு விசாரணைக்கு வந்தபோது, திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம் மற்றும் என்.ஆர்.இளங்கோ ஆகியோரிடம் நீதிபதிகள் வழக்குத் தொடர்பான வீடியோ ஆதாரங்கள் குறித்து கேள்வி கேட்கையில் திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் நீதிபதிகளிடம் பதில் தெரிவித்தனர்.

அதையடுத்து, நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரத்தில் ஆளுநர் சட்டத்திற்கு உட்பட்டு சரியான நடவடிக்கையே எடுத்துள்ளார் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக விளக்கமளிக்க சட்டப்பேரவைச் செயலாளர், முதல்வர், தலைமைச் செயலாளர், மத்திய உள்துறைச் செயலாளர், ஆளுநரின் செயலாளர் உள்ளிட்ட 7 பேருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும் அவர்கள் இரண்டு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டதோடு, இந்த வழக்கை வரும் மார்ச் 1௦ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response