அரசியல்
Now Reading
மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
0

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

by editor sigappunadaMarch 6, 2017 11:15 am

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

நாகப்பட்டினம், ஜகதாப்பட்டினம், ராமேஸ்வரம் போன்ற பகுதிகளில் இருந்து கடலில் மீன் பிடிக்கச்செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் செல்கின்றனர். அதையடுத்து, சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்வது தொடர்பாக பிரதமருக்கு, முதல்வர் பழனிச்சாமி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது, ‘கடந்த 2 நாட்களில் 32 மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். கச்சத்தீவு திருவிழா நெருங்கும் நிலையில், மீனவர்கள் கைது செய்யப்படுவதும், மீனவர்கள் மீதான தாக்குதலும் பெரும் கவலை தருகிறது.

மீனவர்கள் உரிமையை நிலைநாட்ட கச்சத்தீவை மீட்க வேண்டும். எனவே, கைது செய்யப்பட்ட மீனவர்களை விரைவில் விடுதலை செய்திடவும், மீனவர்களின் உடமையை திருப்பி வழங்குவதற்கும் மத்திய அரசு தகுந்த நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். மேலும், மீனவர்களை துன்புறுத்தமாட்டோம் என இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை இலங்கை மதிக்க தவறிவிட்டது .

தென் கிழக்கு ஆசிய நாடுகள் உட்பட கடல் எல்லை உள்ள நாடுகள் மீன்பிடிக்க இருதரப்பு ஒப்பந்தங்களை ஏற்படுத்தி, சிக்கலின்றி மீன்பிடித்து வருவதாகவும், மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் இந்தியா இலங்கை இடையே ஒரு ஒப்பந்தத்தை ஏன் ஏற்படுத்தக்கூடாது’ என்றும் அதில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிச்சிருங்க !
அடித்து கொலை செய்யப்பட்டார் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலர் - முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஓய்வெடுப்பதற்காக பயன்படுத்திவந்த கொடநாடு எஸ்டேட் பஙகளாவில் பணியாற்றும் காவலாளி கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளிக்கு கையில் அரிவாள் வெட்டுக்காயம் ஏற்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response