சினிமா
Now Reading
மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் சுசித்ரா
0

மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் சுசித்ரா

by editor sigappunadaMarch 3, 2017 1:43 pm

தனுஷ், அனிருத், டிடி உள்ளிட்ட பிரபலங்கள் சிலரது புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளதால், மீண்டும் சர்ச்சையில் சிக்கினார் சுசித்ரா.

அவரது ட்விட்டர் தளத்தில் வெளியாகும் கருத்துக்களால் கடும் சர்ச்சையில் சிக்கியிருப்பவர் சுசித்ரா. மார்ச் 3-ம் தேதி காலையில் தனுஷ் – த்ரிஷா, அனிருத் – ஆண்ட்ரியா, டிடி மற்றும் ஹன்சிகா உள்ளிட்டவர்களின் புகைப்படங்கள் சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டு ‘இது இவருடைய லீலை’ என்று கூறப்பட்டிருந்தது. இப்படங்களால் கடும் சர்ச்சை உண்டானது. திரையுலக பிரபலங்கள் பலரும் கடும் அதிர்ச்சியடைந்தார்கள்.

அதனைத் தொடர்ந்து சுசித்ரா, “நான் இதைப் போன்ற மோசமானவற்றை பகிர்வேன் என நினைப்பவர்கள் என்னைத் தொடர வேண்டாம் என வேண்டி கேட்டுக் கொள்கிறேன். ஏனென்றால் இது அடிக்கடி நடக்கிறது. எனக்கும் எரிச்சலாக இருக்கிறது.

நான் நடிகர் நடிகைகளுடன் பேசுவதில்லை. அவர்கள் புகைப்படங்கள் எதுவும் என்னிடம் இல்ல. இதையெல்லாம் விட, நான் இப்படி இழிவுபடுத்தும் ஆள் கிடையாது.

இதை செய்து கொண்டிருக்கும் நபரின் ஆசை நான் எனது ட்விட்டர் கணக்கை முடக்க வேண்டும் என்பதே. அதை இப்போது செய்து விடுவேன். ஆனால் இங்கு என்னை நிஜமாகவே நேசிக்கும் மக்கள் இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும். எனவே, என்ன செய்ய முடியும் என்பதை யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அழுத்தம் அதிகமாக இருப்பதால் இப்போது முடக்கவுள்ளேன். என்னை உண்மையாக பின்தொடர்பவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response