அரசியல்
Now Reading
மார்க்சிஸ்ட் கட்சி தனியாக போட்டியிடுவது ஏன்?
0

மார்க்சிஸ்ட் கட்சி தனியாக போட்டியிடுவது ஏன்?

by editor sigappunadaMarch 19, 2017 1:06 pm

ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக மக்கள் நலக் கூட்டணி கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக மக்கள் நலக் கூட்டணி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. முன்னணி தலைவர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகியவை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என கருத்து தெரிவித்துள்ளன.ஆனால்,மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலில் போட்டியிடுவதில் உறுதியாக இருந்ததால் கூட்டணி கட்சிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கூட்டணி கட்சிகளுடனான ஆலோசனைக்கு பிறகு மக்கள் நலக் கூட்டணி இனி தேர்தல் அரசியலிலிருந்து விலகிக் கொள்ளவும், மக்கள் பிரச்சனைகளில் மட்டும் முன்னின்று போராடவும் முடிவு செய்யபட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே,செய்தியாளர்களிடம்பேசிய சிபிஎம் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், “மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், ஆர்கே நகர் இடைத்தேர்தல் வேட்பாளராக வடசென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் லோகநாதன் போட்டிடுகிறார். மாற்று அரசியலை முன்னேடுக்கவே ஆர்கே நகரில் போட்டியிடுகிறோம். கூட்டணிக்குள்ளான கருத்து வேறுபாடுகளை ஊடங்கங்களுக்கு கூற வேண்டிய அவசியமில்லை. மக்கள் நலக் கூட்டணி தொடர வேண்டியதே எங்கள் விருப்பம். எனவே, தோழமை கட்சிகள் தங்கள் வேட்பாளருக்கு ஆதரவு தர வேண்டும்” என அவர் கூறினார்.

வேட்பாளர் அறிவிப்பு குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் முத்தரசன் கூறுகையில், “கூட்டணி கட்சிகளுக்குள் எந்தவித கருத்து வேறுபாடுகளும் கிடையாது, நாங்கள் மாற்று அரசியலை முன்னெடுக்கவே விரும்புகிறோம் எனவே மார்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக நாளை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்களுடன் ஆலோசித்து முடிவை அறிவிப்போம் என கூறினார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response