மாவட்டம்
Now Reading
மாயாவதி சகோதரருக்கு ரூ.1300 கோடி சொத்து – வருமான வரித்துறை விசாரணை
0

மாயாவதி சகோதரருக்கு ரூ.1300 கோடி சொத்து – வருமான வரித்துறை விசாரணை

by editor sigappunadaJanuary 10, 2017 10:35 am

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உத்தரபிரதேச முதல்-மந்திரியாக இருந்தபோது முறைகேடாக சொத்து சேர்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மாயாவதியின் சகோதரர் அனந்த குமார் மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து வாங்கி குவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை அனந்தகுமாரின் மொத்த சொத்து மதிப்பு ரு.7.5 கோடியாக இருந்தது.

தற்போது அவரது சொத்து மதிப்பு ரூ.1316 கோடியாக உயர்ந்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. திடீரென சில ஆண்டுகளுக்குள் அவர் சொத்து மதிப்பு எப்படி இந்த அளவுக்கு உயர்ந்தது என்பது வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

ரூ.1300 கோடி சொத்து சேர்த்துள்ள அனந்தகுமார் அதிக அளவில் வெளியில் தன்னைப் பற்றி பிரபலப்படுத்தி கொள்ளாதவர். ஓசையின்றி அவர் சொத்து சேர்த்து இருப்பது விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.

நிறைய நிறுவனங்களில் அனந்தகுமார் பங்குதாரராகவும் இயக்குனராகவும் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல நிறுவனங்கள் போலி பெயர்களில் ஒரே முகவரியில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து மாயாவதி சகோதரர் அனந்தகுமாரின் ரூ.1300 கோடி சொத்துக்கள் பற்றி விசாரிக்க வருமான வரித்துறை தயாராகி வருகிறது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response