மாவட்டம்
Now Reading
மாணவிகளை செல்போனில் படம்பிடித்து கிண்டல் செய்த 5 பேருக்கு அரிவாள் வெட்டு
0

மாணவிகளை செல்போனில் படம்பிடித்து கிண்டல் செய்த 5 பேருக்கு அரிவாள் வெட்டு

by editor sigappunadaMarch 12, 2017 11:30 am

திருவாரூர் அருகே பள்ளிக்கூட ஆண்டு விழாவில் மாணவிகளின் நடன நிகழ்ச்சியை செல்போனில் படம்பிடித்து கிண்டல் செய்த 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

திருவாரூர் மாவட்டம் வேப்பத்தாங்குடியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. மாணவிகளின் நடன நிகழ்ச்சியின் போது, வெளியூரை சேர்ந்த சிலர், செல்போனில் படம்பிடித்ததோடு, கிண்டல் செய்துள்ளனர்.

இதனை மாணவிகளின் பெற்றோர் கண்டித்துள்ளனர். இதில் ஏற்பட்ட தகராறில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, ரஞ்சித், மாதவராஜ், செல்வம், ஷிவதாஸ் உள்ளிட்ட 4 பேரும் அரிவாளால் தாக்கியதாக கூறப்படுகிறது.

காயமடைந்த சரவணன், முகேஷ், சிவக்குமார், மணிகண்டன், விக்னேஷ் ஆகிய 5 பேரும் திருவாரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ரஞ்சித் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிச்சிருங்க !
ரஜினி கொடும்பாவியை எரித்த சிலர் போயஸ் கார்டனில் பரபரப்பு - சென்னை செம்மொழி பூங்கா பகுதியில் நடிகர் ரஜினிகாந்தின் கொடும்பாவியை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் முன்னேற்றப் படையைச் சேர்ந்தவர்களைப் போலீஸார் கைது செய்தனர். முன்னதாக, ரஜினிகாந்த் வீட்டுக்கு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response