மாவட்டம்
Now Reading
மாணவர்கள் விடிய, விடிய போராட்டம்: மதுரையில் அனைத்து ரெயில்களும் ரத்து
0

மாணவர்கள் விடிய, விடிய போராட்டம்: மதுரையில் அனைத்து ரெயில்களும் ரத்து

by editor sigappunadaJanuary 20, 2017 10:20 am

201701201100634_Jallikattu-students-struggle-all-trains-canceled-in-Madurai_SECVPF

ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கி மீண்டும் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும். விவசாயிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்படபல கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவ-மாணவிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் நேற்று மதியம் மாணவர்களில் ஒரு பிரிவினர் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தத்தனேரி வைகை ஆற்று பாலத்தில் கோவை-நாகர்கோவில் ரெயில் வந்து கொண்டிருப்பதை கண்ட மாணவர்கள் பாலத்தில் ஏறி மறித்தனர். நடுபாலத்தில் நிறுத்தப்பட்ட ரெயில் அங்கேயே நிற்கிறது. இந்த போராட்டம் இன்றும் நீடித்தது.

இதனால் சென்னையில் இருந்து மதுரை வழியாக குருவாயூர் செல்லும் ரெயில் திண்டுக்கல் ரெயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டது. இதேபோல சென்னையில் இருந்து வரும் வைகை உள்பட பல ரெயில்கள் திண்டுக்கல்லில் நிறுத்தப்பட்டன.

மேலும் தென்மாவட்டங்களில் இருந்து மதுரை நோக்கி வந்த ரெயில்கள் அனைத்தும் விருதுநகரிலேயே நிறுத்தப்பட்டது.மதுரை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் பாண்டியன எக்ஸ்பிரஸ், சென்னை ஸபெ‌ஷல் ரெயில், புனலூர் பயணிகள் ரெயில்கள் புறப்பட முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டன. மதுரையில் இருந்து செல்லும் அனைத்து ரெயில்களும் ரத்தானதால் பயணிகள் இன்றி ரெயில் லையம் இன்று காலை வெறிச்சோடி காணப்பட்டது.

மேல்மருவத்தூர் கோவிலுக்கு செல்ல நூற்றுக்கணக்கான பெண் பக்தர்கள் இன்று காலை ரெயில் நிலையத்திற்கு வந்தனர். ரெயில்கள் ரத்தானதை அறிந்து ஏமாற்றத்துடன் வீடுகளுக்கு திரும்பி சென்றனர். வெளியூர் பயணிகள் உறவினர்களின் வீடுகளுக்கு சென்ற வண்ணம் இருந்தனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response