மாவட்டம்
Now Reading
மன அழுத்தம் குறைய கலெக்டர் கூறும் ஐடியா
0

மன அழுத்தம் குறைய கலெக்டர் கூறும் ஐடியா

by editor sigappunadaDecember 11, 2016 11:12 am

மன அழுத்தம் குறித்து மருத்துவர்கள் குறிப்பிடுகையில், ‘எதிர்பாராத சூழலுக்கு மனிதன் தள்ளப்படும்போதே அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகிறான்’ என்கின்றனர். எதிர்பார்ப்புகளை குறைக்கும்போது மன அழுத்தம் பெருமளவில் குறைந்து போவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். குழந்தைகள், எதிர்பார்ப்புகள் அதிகம் இல்லாதவர்கள். எனவே, அவர்கள் எதையும் ஆனந்தத்துடன் பெற்றுக்கொள்ளும் தன்மையுடையவர்கள். ஆகையால், அவர்களால் மன அழுத்தம் இல்லாமல் வாழ முடிகிறது. ஆனால், பெரியவர்கள் எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்துவதும், கிடைப்பதில் திருப்தி பெறாத நிலையையும் கொண்டிருப்பதால் அதிகமான மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், படிக்கும் விடுதியில் மாணவர்களின் மன அழுத்தத்தை குறைத்து, படிப்பில் கவனம் செலுத்த ராஜஸ்தானில் உள்ள மாவட்ட ஆட்சியர் பல புதிய முயற்சிகளை செய்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்டா எனும் மாவட்டத்தின் ஆட்சியர் ரவிகுமார் சுர்புர். மன அழுத்தத்தைக் குறைக்க, வகுப்புகளுக்கு வரும் மாணவர்களுக்கு வித்தியாசமான முறையில் தயாரிக்கப்பட்ட உற்சாகம் கொடுக்கும் சிறு நூல் தயாரித்துள்ளார். 20 பக்கங்கள் கொண்ட இந்த நூலில் பாலிவுட் வசனங்கள், நகைச்சுவைத் துணுக்குகள், புகழ்பெற்ற தத்துவங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மாணவர்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் இந்தப் புத்தகம் உள்ளது. மேலும், பல்வேறு சவால்களும் கேள்விகளும் விடைகளுடன் இடம்பெற்றுள்ளன. வீட்டை விட்டு வந்து படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு வீட்டின் நினைவால் படிப்பில் கவனம் சிதறாமல் இருக்கும்படியும் இந்தப் புத்தகத்தில் எளிய வழிகள் சொல்லப்பட்டுள்ளன. குடு்ம்பப் பிரச்னை, படிப்பில் ஏற்படும் மன அழுத்தம் ஆகியவற்றை சரிசெய்யவும் வழிவகைகள் சொல்லப்பட்டுள்ளன. இந்த வருடம் மட்டும் அங்கு விடுதியில் தங்கிப் படிக்கும் 15 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். சரியாகப் படிக்கவில்லை என்ற மன அழுத்தத்தால் மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். அதைப் போக்கும்வகையில் இந்த வழிமுறையை மாவட்ட ஆட்சியர் ஏற்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response