மாவட்டம்
Now Reading
மத்திய, மாநில அரசுகள் ஜல்லிக்கட்டு போராட்டத்தை கலைக்க நாடகம் – திருமாவளவன்
0

மத்திய, மாநில அரசுகள் ஜல்லிக்கட்டு போராட்டத்தை கலைக்க நாடகம் – திருமாவளவன்

by editor sigappunadaJanuary 22, 2017 6:35 pm

மத்திய, மாநில அரசுகள் மற்றும் உச்ச நீதிமன்றம் கூட்டு சேர்ந்து ஜல்லிக்கட்டு போராட்டத்தை கலைக்க நாடகம் ஆடுகின்றன என விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

கூடுவாஞ்சேரி அருகேயுள்ள மாடம்பாக்கம், வள்ளலார் நகர் பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

”மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் ஜல்லிக்கட்டுக்காக நடத்தி வரும் போராட்டத்தில் மத்திய மாநில அரசுகள் அஞ்சிப் பணிந்துள்ளது. இதன் காரணமாகவே மாநில அரசு அவசர சட்டம் கொண்டுவந்துள்ளது . ஆனால் நிரந்தர ஜல்லிக்கட்டுக்கு உத்தரவாதம் இல்லை.

ஜல்லிக்கட்டுக்காக நடைபெறும் போராட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் மற்றும் உச்ச நீதிமன்றம் கூட்டு சேர்ந்து ஜல்லிக்கட்டு போராட்டத்தை கலைக்க நாடகம் ஆடுகின்றன” என கூறினார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response