பேட்டி
Now Reading
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தமிழகம் -குற்றம்சாட்டும் ஸ்டாலின்
0

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தமிழகம் -குற்றம்சாட்டும் ஸ்டாலின்

by editor sigappunadaMarch 30, 2017 11:14 am

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தமிழகம் இயங்குவதாக தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

29ஆம் தேதி இரவு புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் கூறுகையில், “தமிழக அரசு இரட்டை வேடம் போடும் அரசாக உள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் தற்போது தமிழக அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலை தமிழக அரசு நடத்துவது போல் தெரியவில்லை” என குற்றம் சாட்டினார்.

இதேபோல் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், “தமிழக விவசாயிகள் பிரச்னையை தீர்ப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி, பிரதமர் மோடியைச் சந்தித்து வலியுறுத்த வேண்டும். தமிழகத்தை ஏமாற்றி மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துகிறது. மேலும், டெல்லியில் போராடும் விவசாயிகளை 30ஆம் தேதி வியாழக்கிழமை சந்திக்க உள்ளேன்” என்று கூறினார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response