மாவட்டம்
Now Reading
மதுரையில் பைப் வெடிகுண்டு பறிமுதல்; போலீசார் விசாரணை!
0

மதுரையில் பைப் வெடிகுண்டு பறிமுதல்; போலீசார் விசாரணை!

by Sub EditorJanuary 26, 2017 5:49 pm

மதுரை மாவட்டம் புதூர் காந்திபுரம் பகுதியில் ரியாஸ் பட்டன் கடை உள்ளது. இங்கு 1 அடி நீளமுள்ள இரண்டு பைப்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அதில் ஒன்றில் வெடிமருந்துகள் நிரப்பப்பட்டிருந்தன. மற்றொன்று, இணைக்க தயார் நிலையில் இருந்துள்ளது. இது பற்றி தகவல் அறிந்த மதிச்சியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான போலீசார் இரண்டு பைப் வெடிகுண்டுகளையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பாண்டி என்ற அப்துல் ரஹ்மான்(42) மற்றும் அப்துல்லா என்ற கே.அப்துல்லா ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் முஸ்லிம் முன்னேற்ற பாசறை அமைப்பை சேர்ந்தவர்கள் எனக்கூறப்படுகிறது.
இவர்கள் என்ன நோக்கத்திற்காக பைப் குண்டை தயாரித்து வருகின்றனர் என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.

இதையும் படிச்சிருங்க !
ரஜினி கொடும்பாவியை எரித்த சிலர் போயஸ் கார்டனில் பரபரப்பு - சென்னை செம்மொழி பூங்கா பகுதியில் நடிகர் ரஜினிகாந்தின் கொடும்பாவியை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் முன்னேற்றப் படையைச் சேர்ந்தவர்களைப் போலீஸார் கைது செய்தனர். முன்னதாக, ரஜினிகாந்த் வீட்டுக்கு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response