உலகம்
Now Reading
மணிலாவில் பயங்கர தீ விபத்து; 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதம்!
0

மணிலாவில் பயங்கர தீ விபத்து; 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதம்!

by Sub EditorFebruary 8, 2017 7:14 pm

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் துறைமுகம் அருகே உள்ள குடிசைப் பகுதியில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. திடீர் ஏற்பட்ட தீயானது, பரோலா காம்பவுண்டு முழுவதும் மளமளவென பரவியதுடன், அருகில் உள்ள பகுதிக்கும் பரவியது. தீ கொழுந்துவிட்டு எரிந்ததால், அந்த பகுதிகள் முழுவதும் புகை மூட்டத்தால் சூழப்பட்டு காணப்பட்டது. இந்த தீ விபத்தால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்துள்ளதாக அந்நாட்டு தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்களது வீடுகளை இழந்து தவித்து வரும் அவல நிலை உருவாகியுள்ளது. இந்த விபத்து ஏராளமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும், வீடுகளை இழந்தோருக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் அந்நாட்டு சமூக நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் படிச்சிருங்க !
பிரியாணிக்கான சண்டையால் நின்று போன திருமணம் - பெண் வீட்டார் அசைவ உணவை வழங்காததால் ஏற்பட்ட பிரச்சினையில், மீரட்டின் முஸாஃபர் நகர் கிராமத்தில் நடைபெற இருந்த திருமணம் பாதியில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்துத் திருமணப் பெண் நக்மா Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response