அரசியல்
Now Reading
மக்கள் போராட்டம் : அரசு கொறடா ஓட்டம்!
0

மக்கள் போராட்டம் : அரசு கொறடா ஓட்டம்!

by editor sigappunadaFebruary 28, 2017 12:35 pm

மக்கள் கருத்துகளைக் கேட்காத எம்.எல்.ஏ., எங்களுக்குத் தேவையில்லை என்றும், அவர் இந்தப் பகுதிக்கு எப்போது வந்தாலும் போராட்டம் நடத்துவோம் என்றும் அரியலூர் எம்.எல்.ஏ.,வும், அரசு தலைமை கொறடாவுமான தாமரை ராஜேந்திரனைக் கண்டித்து அவரது உருவபொம்மையை தொகுதி மக்கள் எரித்தனர்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவாக செயல்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.,க்கள், தொகுதிகளுக்குச் செல்லும்போது மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது தொடர்கிறது. அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூர், திருமானூர், இலந்தைக்கூடம், திருமழபாடி, ஏலாக்குறிச்சி, கோவிலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கீழப்பழுவூர் பள்ளியில் நடந்த விழாவில் அரியலூர் எம்.எல்.ஏ.,வும், அரசு தலைமை கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிக் கொண்டிருந்தார்.

இதையறிந்த தீபா பேரவையினர் மற்றும் பொதுமக்கள் ராஜேந்திரனுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஏலாக்குறிச்சியில் கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடத்த தயாராகினர். இதையறிந்த ராஜேந்திரன் திருமானூர், இலந்தைக்கூடம் ஆகிய பகுதிகளில் மட்டும் இலவச சைக்கிள்களை வழங்கிவிட்டு, ஏலாக்குறிச்சிக்கு வராமல் விழாவை ரத்து செய்துவிட்டு சென்றுவிட்டார். அப்பள்ளியில் நடைபெறவிருந்த அரசு விழா ஒத்திவைக்கப்பட்டது. இதேபோன்று பல்வேறு பள்ளிகளில் நடைபெறவிருந்த விழாக்களும் ஒத்திவைக்கப்பட்டன.

இதுகுறித்து போராட்டம் நடத்தியவர்கள் கூறுகையில், ராஜேந்திரன் மக்கள் பிரதிநிதியாக செயல்படவில்லை. அரசு கொறடாவாக இருந்துகொண்டு பதவியை துஷ்பிரயோகம் செய்கிறார். கூவத்தூர் விடுதியில் சொகுசு வாழ்க்கையை அனுபவித்துவிட்டு, மக்களின் எதிர்பார்ப்பை அவர் மதிக்கவில்லை. மக்கள் கருத்துகளைக் கேட்காத எம்.எல்.ஏ. எங்களுக்குத் தேவையில்லை. அவர் இந்தப் பகுதிக்கு எப்போது வந்தாலும் போராட்டம் நடத்துவோம் என்றனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response