மாவட்டம்
Now Reading
மக்கள் குறைகேட்பு: ஜெ.தீபா
0

மக்கள் குறைகேட்பு: ஜெ.தீபா

by editor sigappunadaMarch 26, 2017 9:34 am

ஆர்.கே.நகரில் இன்று முதல் வீடு வீடாக சென்று மக்கள் குறைகளை கேட்க உள்ளதாக ஜெ.தீபா தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கு அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில் எம்.ஜி.ஆர். ஜெயலலிதா தீபா பேரவையின் சார்பில் இன்று முதல் மக்களை நேரடியாகச் சந்தித்து தீபா குறைகளைக் கேட்டறிய உள்ளார்.

மேலும் 27, 28 ஆகிய தேதிகளில் தீபா ஆர்.கே.நகரில் பிரசார பொதுக்கூட்டத்தைக் கூட்ட இருப்பதாகவும் அதற்கு நேற்று மாலை அனுமதி கேட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 256 வாக்குச்சாவடிக்குத் தேர்தல் பணி குழுவும் அமைக்கப்பட்டு இருக்கிறது. 57 தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் வாரியாக பேரவைத் தலைவர்கள் பணியை மேற்கொள்ள இருக்கிறார்கள்.

இவர் நான்கு சின்னங்களை பரிசிலித்து இருக்கிறார். அவர் பத்திரிகை துறையில் இருந்ததால் பேனா சின்னத்தை விரும்பி உள்ளார். பேனா கிடைக்காவிட்டால் படகு சின்னத்தை தேர்வு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response