ஸ்பெஷல்
Now Reading
மகளிர் தின சிறப்பு: சென்னையிலிருந்து விமானத்தை இயக்கும் பெண்கள் குழு
0

மகளிர் தின சிறப்பு: சென்னையிலிருந்து விமானத்தை இயக்கும் பெண்கள் குழு

by editor sigappunadaMarch 8, 2017 12:52 pm

உலக மகளிர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சென்னையிலிருந்து 2 ஏர் இந்தியா விமானங்களை முற்றிலும் பெண்கள் மட்டுமே கொண்ட குழு இயக்குகிறது.

இதில், ஒரு விமானம் சென்னையிலிருந்து தில்லிக்கும், மற்றொரு விமானம் சென்னையிலிருந்து சிங்கப்பூருக்கும் இயக்கப்படுகிறது. தில்லி செல்லும் ஏர் இந்தியா விமானத்தை தீபா என்ற பெண் விமானி இயக்குகிறார். இவருடன் 6 பெண்களும் சேர்ந்து பயணிக்கின்றனர்.

இதேபோல், சென்னையிலிருந்து சிங்கபூருக்கு செல்லும் விமானத்தையும் மற்றொரு பெண்கள் குழு இயக்குகிறது.

இதையடுத்து விமான நிலையங்களில் சர்வதேச மற்றும் உள்ளூர் முனையங்களில் வேலை பார்த்த போதும் விமானத்தில் பயணம் செய்யாமல் பலர் உள்ளனர். அந்த பெண் ஊழியர்களைத் தேர்வு செய்து தனி விமானத்தில் அழைத்துச்செல்ல ஏர் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக ஜாய் ரைடு என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தி விமானத்தில் பயணம் செய்திராத 50 பெண் ஊழியர்களை தேர்வு செய்து ஆக்ராவுக்கு அழைத்துச்செல்ல திட்டமிட்டுள்ளது.

உலக மகளிர் தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த பயணத்தின் பயணக்கட்டணம் முற்றிலும் இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response