க்ரைம்
Now Reading
போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டி லாரியை கடத்திய திருடன்!
0

போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டி லாரியை கடத்திய திருடன்!

by Sub EditorMay 3, 2017 2:21 pm

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே போலீசார் போல் நடித்து, மர்ம நபர்கள் லாரியை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் ஆத்தூர் ராஜபுரம் பகுதியைச் சேர்ந்த காசிமன்னன், சொந்தமாக லாரி வைத்துள்ளார். கடந்த வாரம் ஆத்தூரில் இருந்து பெங்களூருவுக்கு 8 டன் பாக்குகளை ஏற்றிக் கொண்டு இவரது லாரி சென்று கொண்டிருந்தது. ஓமலூர் அருகே உள்ள எலத்தூரில் சென்று கொண்டிருந்த போது, காவல்துறை என்ற ஸ்டிக்கர் ஒட்டிய கார் ஒன்று, லாரியை வழிமறித்தது. பின்னர் காரில் இருந்த 4 பேர், லாரியில் இருந்த ஓட்டுநர்கள் 2 பேரை காரில் ஏற்றினர்.
ஓமலூர் அரசு கல்லூரி அருகே வந்தவுடன், 2 பேரையும் இறக்கிவிட்டு அவர்களிடம் இருந்த 10 ஆயிரம் ரூபாயை பறித்துவிட்டு நான்கு பேரும் தப்பினர். பின்னர், லாரி ஓட்டுநர்கள் 2 பேரும் எலத்தூருக்கு சென்ற போது லாரி மாயமானது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

– ராஜ்

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response