பேட்டி
Now Reading
போலீஸார் வன்முறையில் ஈடுபட்டிருந்தால் நடவடிக்கை: ஆணையர் ஜார்ஜ்
0

போலீஸார் வன்முறையில் ஈடுபட்டிருந்தால் நடவடிக்கை: ஆணையர் ஜார்ஜ்

by editor sigappunadaJanuary 24, 2017 4:09 pm

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போலீஸார் வன்முறையில் ஈடுபட்டிருந்தால், கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் கூறியுள்ளார்.

கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக நடந்துவந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் நேற்று போலீஸார் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்குமுன்பு, இந்தப் போராட்டம் மிகவும் அமைதியான முறையில் நடந்து வந்தது. இதில் நேற்று கலவரம் ஏற்பட்டது. இதில், போலீஸார் வன்முறையில் ஈடுபட்ட பல வீடியோக்கள் வெளியாயின.

இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் ஜார்ஜ் கூறுகையில், ‘அமைதியான முறையில் நடந்துவந்த போராட்டத்தை நானும் பாராட்டினேன். இதில், சமூக விரோதிகள் புகுந்துவிட்டதால் போராட்டம் திசை மாறிச் சென்றுவிட்டது. இதுகுறித்து உளவுத் துறை அறிக்கை அளித்துள்ளது. மேலும் சமூக விரோதிகள் போராட்டத்தில் புகுந்ததால் நடவடிக்கையில் ஈடுபட வேண்டியதாயிற்று. ஏற்கனவே சமூக விரோதச் செயலில் ஈடுபட்ட 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தத் தாக்குதலில் 94 காவலர்களும், காவல்துறை உயர் அதிகாரிகளும் காயம் அடைந்துள்ளனர். 51 காவல் வாகனங்கள் சேதமடைந்துள்ளன. இதில், போலீஸார் வன்முறையில் ஈடுபட்டிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை, போலீஸார் வன்முறையில் ஈடுபட்டனர் என்பது குறித்த வீடியோ காட்சிகளை நான் பார்க்கவில்லை. இனிமேல் வன்முறை ஏற்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ எனக் கூறினார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response