மாவட்டம்
Now Reading
போராடும் இளைஞர்களே வேண்டாமே ஆபாச வார்த்தைகள்
0

போராடும் இளைஞர்களே வேண்டாமே ஆபாச வார்த்தைகள்

by editor sigappunadaJanuary 19, 2017 7:19 pm

sigappunada_jallikattu (34)

மக்கள் உரிமைகளைப் பாதுகாத்திட, மக்கள் போராட்டம்தான் ஒரே வழி என்பதை நிரூபித்துள்ளது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெற்றுவரும் போராட்டங்கள். போராட்டங்கள் இல்லாமல் விடியல் இருக்காது என்பதை உணர்ந்துதான் ஜல்லிக்கட்டுக்கு தீர்வு கிடைக்கும்வரையில் இரவும் பகலுமாக மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் தன்னெழுச்சியாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிகாரத்தில் உள்ளவர்களின் பேச்சுகளையும் வெறும் அறிக்கைகளையும் நம்பாமல் தமிழக மக்கள் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

இதுவரை போராட்டங்கள் அறவழியில் நடந்துகொண்டிருக்கிறது. ஆங்காங்கே உணர்ச்சி மிகுதியால் மாணவர்கள், சசிகலா மீதும், முதல்வர் பன்னீர்செல்வம் மீதும் சில எதிர்ப்பு வார்த்தைகளை வெளிப்படுத்தினார்கள். பாரத பிரதமர் மோடி மீதும் எதிர்ப்பு காட்டினார்கள் ஆங்காங்கே.ஆனால் அவை எங்கள் நோக்கமல்ல, இது போராட்டநோக்கத்தை மாற்றி விடும் என்று உணர்ந்த போராட்ட குழுவில் சிலர்,’ எங்களால் தேர்ந்தெடுக்கபட்ட முதல்வர், பிரதமர் மீது உணர்ச்சிமிகுதியால் அப்படி எதிர்ப்பு காட்டி விட்டோம். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்.’ என்று கூறினர்.

அது மிகுந்த வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் இன்று மெரினாவில் சிலர் ஒரு மேலே உள்ள போட்டோவை பாருங்கள், நாம் எடுத்த அந்த போட்டோவில் உள்ள வாசகத்தை பாருங்கள். அது மிகவும் அருவருக்கதக்க ஆபாசத்தை வெளிப்படுத்துகிறது. நமது பிரதமரை நாமே இப்படி கொச்சைப்படுத்தலாமா? உயிரையும் துச்சமென நினைத்து, உண்மையான உணர்வோடு போராடும் மாணவர்கள் இதை விரும்பமாட்டார்கள்.

வேண்டாம் ப்ளீஸ்

 

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response