மாவட்டம்
Now Reading
போயஸ் கார்டனில் கண் கலங்கிய சசிகலா
0

போயஸ் கார்டனில் கண் கலங்கிய சசிகலா

by editor sigappunadaDecember 29, 2016 3:01 pm

இன்று அதிமுக பொதுக்குழு கூடியிருந்த நிலையில், போயஸ் கார்டனில்  சசிகலா, ஜெயலலிதாவுக்குப் பிடித்த பச்சைக்கலர் சேலை, ஜாக்கெட்டில் தயாராகி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா படத்துக்கு மலர்தூவினார். அதன்பிறகு, எள் கலந்த சாதத்தை எடுத்துக்கொண்டு போய் ஜெயலலிதாவின் ஆத்மாவை நினைத்து காக்கைக்கு வைத்துள்ளார், காக்கை நீண்டநேரம் வரவில்லை. பிறகு, காகம் உணவை எடுத்தபிறகு, வெளியே வந்தார் சகிகலா.

அங்கு காத்திருந்த ஓ.பி.எஸ்., நீங்கள்தான் பொதுச்செயலாளராக ஆகவேண்டும் என அதிமுக பொதுக்குழு தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது என்று தீர்மானத்தை வாசித்தார். அதன் நகலையும் காண்பித்தார். சசிகலாவுக்குப் பின்புறம் தினகரன், விவேக் போன்ற உறவுகள் நின்றுகொண்டிருந்தார்கள். தீர்மானத்தைக் கேட்டவுடன் ஜெயலலிதாவின் புகைப்படத்துக்கு முன்பு நின்று கண்கலங்கினார் சசிகலா.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response