க்ரைம்
Now Reading
பொதுச் செயலாளர் சர்ச்சை:சசிகலா பதில்!
0

பொதுச் செயலாளர் சர்ச்சை:சசிகலா பதில்!

by editor sigappunadaFebruary 28, 2017 12:41 pm

அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்ற சசிகலாவுக்கு, பதில் தெரிவிக்கும்படி தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸுக்கு சசிகலா இன்று பதில் அனுப்பினார்.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அவர் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று ஓ.பி.எஸ். அணியினர் கூறிவந்தனர். 5 ஆண்டுகள் தொடர்ந்து உறுப்பினராக இருப்பவரை மட்டுமே பொதுச் செயலாளராக தேர்வுசெய்ய முடியும் என்று கட்சியில் விதி இருப்பதாகவும் தெரிவித்து, ஓ.பி.எஸ். அணியினர் மைத்ரேயன் எம்.பி., தலைமையில் டெல்லி சென்று தேர்தல் கமிஷனில் மனு கொடுத்தனர். அதில் சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்வு செய்தது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கூறினர்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட தேர்தல் கமிஷன் இதுபற்றி பதில் அளிக்குமாறு சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பினார்கள். பிப்ரவரி 28ஆம் தேதியான இன்று இது தொடர்பான விசாரணை நடைபெறும் என்றும் எனவே, அதற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த நோட்டீசை ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் பெங்களூரு சிறை அதிகாரிகளிடம் கொடுத்தனர். அவர்கள் சசிகலாவிடம் தேர்தல் கமிஷன் நோட்டீஸை ஒப்படைத்தனர். தேர்தல் கமிஷன் விதித்த கெடு இன்றுடன் முடிவடைகிறது. ஆனால் நேற்றுவரை சசிகலா தரப்பில் இருந்து பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை.

இந்த நிலையில், தற்போது அதிமுக சசிகலா சார்பில் தேர்தல் ஆணையத்திடம் இன்று பதில் மனு தாக்கல் செய்யபட்டு உள்ளது. சசிகலா தரப்பில் அவரது வழக்கறிஞர் செந்தில், கட்சி விதிகளின்படியே சசிகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று தலைமை தேர்தல் ஆணையத்திடம் பதில் மனுவை சமர்ப்பித்தார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response