மாவட்டம்
Now Reading
பொங்கல்-வேட்டி சேலைகளை திருடி விற்பனை: துணை தாசில்தார் கைது
0

பொங்கல்-வேட்டி சேலைகளை திருடி விற்பனை: துணை தாசில்தார் கைது

by editor sigappunadaJanuary 7, 2017 7:22 pm

நன்னிலம் தாலுகா அலுவலகத்தில் பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்களுக்கு வழங்குவதற்காக விலையில்லா வேட்டி-சேலைகள் 35 பண்டல்களில் வைக்கப்பட்டு இருந்தன.

 இந்த பண்டல்களை நன்னிலம் தேர்தல் துணை தாசில்தார் சிங்காரவேலு(வயது35) என்பவர் வேனில் எடுத்து சென்று கொண்டிருந்தார். இதனை பார்த்த தாசில்தார் சுந்தரவடிவேல் இதுகுறித்து நன்னிலம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் துணை தாசில்தார் சிங்காரவேலு 35 பண்டல்களில் இருந்த விலையில்லா வேட்டி-சேலைகளை திருடி சென்று, பழைய துணி வியாபாரியிடம் விற்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.5 லட்சம்.

இதைத்தொடர்ந்து போலீசார் சிங்காரவேலுவை கைது செய்தனர். இதில் தொடர்புடைய பழைய துணி வியாபாரி சுரேஷ்குமாரை போலீசார் தேடிவருகின்றனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response