பேட்டி
Now Reading
பேனர்களை குறைத்து திமுக கொடிகளை பறக்கவிடுங்கள் : மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
0

பேனர்களை குறைத்து திமுக கொடிகளை பறக்கவிடுங்கள் : மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

by editor sigappunadaJanuary 29, 2017 4:34 pm

 

பேனர்களைக் குறைத்து திமுக கொடிகளை அதிகம் பறக்க விடுங்கள் என்று தொண்டர்களுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டத்திற்காக கோவை மாநகருக்கு சென்ற போது வழிநெடுக ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்ததாகவும், அதுபோலவே வெளியூர் நிகழ்வுகள் பலவற்றிலும் காண்பதாகக் கூறியுள்ளார். ஒவ்வொருவரும் தனித்தனியாகப் பேனர்கள் வைப்பதால் தான் அருமையான விழாக்கள் கூட ஆடம்பரமானதாக ஆகிவிடுகின்றன. எனவே இத்தகைய ஆடம்பர வெளிப்பாடுகள் அதிகமாகி முகம் சுளிக்கும் அளவுக்கு அமைந்து விடக் கூடாது என்று எச்சரிக்க வேண்டிய பொறுப்பும் உரிமையும் தனக்கு இருப்பதாகக் கருதுவதால் இந்த அன்பு வேண்டுகோளை விடுக்கிறேன் என்றும் கூறியுள்ளார். மேலும், சாலையின் இருபுறத்திலும், சில நேரங்களில் சாலையின் நடுவிலும் பேனர்கள் அமைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்..

மேலும், என்ன நிகழ்ச்சி நடைபெறுகிறது எங்கே நடைபெறுகிறது என்பதை கழகத்தினருக்கும் பொதுமக்களுக்கும் தெரிவிக்கும் வகையில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் ஓரிரு பேனர்கள் மட்டும் அமைப்பதில் தவறில்லை. அவ்வாறு வைக்கப்படும் பேனர்களும் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறின்றி அமைக்க வேண்டும் என்றும் பேனர்களில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் மற்றும் க.அன்பழகன் ஆகியோரின் படங்கள் மட்டும் இடம் பெற வேண்டும், வழக்கமான ஆங்கிலத் தேதியுடன் கலைஞர் அவர்கள் சட்டப்பூர்வமாக்கிய திருவள்ளுவராண்டு- தமிழ் மாதம்-தேதி ஆகியவற்றையும் மறவாமல் குறிப்பிட வேண்டும் என்று அந்த அறிக்கையின் மூலம் திமுக தொண்டர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response