க்ரைம்
Now Reading
பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பாதிரியார்
0

பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பாதிரியார்

by editor sigappunadaJanuary 3, 2017 6:53 pm

இத்தாலியின் வெனிட்டோ பிராந்தியத்தில் உள்ள பதுவா நகரைச் சேர்ந்த ஆண்ட்ரியா கண்டின் (வயது 48) என்பவர் கத்தோலிக்க பாதிரியாராக பொறுப்பு வகித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் பாதிரியார் மீது, அவரது முன்னாள் காதலிகள் மூன்று பேர் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினர்.

அதில், பாதிரியார் ரகசியமாக விபச்சார தொழில் மூலம் வருமானம் ஈட்டி வருவதாகவும், அவருக்கு நன்கு பழக்கமான 15 இளம்பெண்களை அத்தொழிலில் ஈடுப்படுத்தி வருவதாகவும் குற்றம்சாட்டினர்.

இக்குற்றச்சாட்டை தொடர்ந்து பாதிரியாரின் வீட்டில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது, வீட்டிற்குள் எடுக்கப்பட்ட ஆபாசப்படக் காட்சிகள் அடங்கிய வீடியோ சி.டி.கள் மற்றும் ஆபாச புகைப்படங்களை கைப்பற்றியுள்ளனர்.

இதுகுறித்து 49 வயதான பெண் ஒருவர் கூறுகையில், பாதிரியாருடன் எனக்கு ரகசிய தொடர்பு இருந்தது. ஆனால், அதற்கு பிறகு அவருக்கு எண்ணற்ற பெண்களுடன் தொடர்புள்ளதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து விலகி விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
100%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response