மாவட்டம்
Now Reading
பூரண மதுவிலக்குக்கோரி நடைபயணம் – குமரி அனந்தன் அறிவிப்பு
0

பூரண மதுவிலக்குக்கோரி நடைபயணம் – குமரி அனந்தன் அறிவிப்பு

by editor sigappunadaMarch 6, 2017 10:02 am

தமிழகத்தில் பூரண மதுவிலக்குக்கோரி காந்தி பேரவை தலைவர் குமரிஅனந்தன் பாதயாத்திரை பயணம் தொடங்க உள்ளார்.

காந்தி பேரவை தலைவர் குமரிஅனந்தன் மதுவிலக்கு குறித்து விடுத்துள்ள அறிக்கையில் கூறுவதாவது, வள்ளுவர் முதலான சான்றோர்கள், வலியுறுத்திய மதுவிலக்கை இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் 1917-ல் சேலம் நகரசபை எல்லைக்குள் கொண்டு வந்தார் அதன் தலைவர் ராஜாஜி. அந்த முதல் மதுவிலக்கு வந்த இந்த நூறாம் ஆண்டில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு உடனே வேண்டும் என்ற கோரிக்கையுடன் எனது 85-ஆம் பிறந்த நாளான வருகிற 19ஆம் தேதி காலை 10 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை காமராஜ் அரங்கிலிருந்து, 25 தோழர்களுடன் ராஜாஜி பிறந்த ஊரான தொரப்பள்ளி வரை 270 கிலோமீட்டர் நடைபயணம் மேற்கொள்ளுகிறோம்.

சென்னை தொடங்கி, 20 நாட்கள் மது வேண்டாம், பூரண மதுவிலக்கு வேண்டும் என்று பரப்புரை செய்துகொண்டே இந்த நடைபயணம் தொடரும். என்னோடு நடைபயணம் மேற்கொள்ள விரும்பும் அன்பர்கள், குமரிஅனந்தன், தலைவர், காந்தி பேரவை லாயிட்சு குடியிருப்பு, ராயப்பேட்டை, சென்ன-14. என்ற முகவரிக்கும், 93892155772 என்ற அலைபெசிக்கும் தொடர்பு கொள்ள அன்போடு வேண்டுகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response