உலகம்
Now Reading
புதிய தொழில்நுட்ப வசதிகள் கொண்ட ஸ்மார்ட்போன் -நோக்கியா
0

புதிய தொழில்நுட்ப வசதிகள் கொண்ட ஸ்மார்ட்போன் -நோக்கியா

by editor sigappunadaJanuary 25, 2017 2:00 pm

 

புதிய தொழில்நுட்ப வசதிகள் கொண்ட ஸ்மார்ட்போன்களை மக்கள் பெருமளவில் விரும்புகின்றனர். எனவே ஸ்மார்ட்போன் விற்பனையில் நோக்கியா நிறுவனமும் தனது விற்பனையை தொடங்கியுள்ளது. அனைத்து நிறுவனத்துடனும் போட்டியிடும் வகையில், புதிய வடிவத்திலும் அதிக பயன்பாடும் கொண்ட ஸ்மார்ட்போன்களை குறைந்த விலையில் விற்பனை செய்ய தொடங்கியுள்ளது. அதன் படி கடந்த மாதம் வெளிவந்த நோக்கியா 6 பெரும் வரவேற்பினை பெற்றது.

மேலும் அதன் பயன்பாடு பற்றிய கருத்துக்களும் நல்ல முறையில் அமைந்துள்ளன. காரணம் அதில் பயன்படுத்தும் Snapdragon 835 processor என்பதால் அதிகமான ஆப்களை நாம் விரைந்து பயன்படுத்த முடியும் எனவே இதன் விற்பனையும் அதிகரித்து வருகிறது.

தற்போது அதன் ப்ரிமியம் மாடல் வெளிவர இருப்பதாகவும் அதிலும் Snapdragon 835 பயன்படுத்த இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் பற்றிய விரிவான தகவல்கள் விரைவில் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர். இந்த ஆண்டு புதிய மாடலுடன் களம் இறங்கி இருந்தாலும், மொபைல் விற்பனையில் சிறந்து விளங்கிய நோக்கியா நிறுவனம் மீண்டும் தனது இடத்தினைப் பெறுமா? என பொறுத்திருந்து பார்ப்போம்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response