மாவட்டம்
Now Reading
“புகார் கொடுத்தால் தாக்குவார்களா?” குமுறும் மாணவர்கள்!
0

“புகார் கொடுத்தால் தாக்குவார்களா?” குமுறும் மாணவர்கள்!

by Sub EditorMarch 21, 2017 12:45 pm

மேல்மருவத்தூர் என்றாலே ஏதாவது சர்ச்சை என்று நினைக்கும் அளவுக்கு அடிக்கடி ஏதாவது பிரச்சனையில் சிக்கிக் கொள்கின்றது ஆதிபராசக்தி பீடம். இப்போது சர்ச்சையில் சிக்கியிருப்பது பீடம் நடத்தும் ஆதிபராசக்தி பொறியல் கல்லூரி.
ஆதிபராசக்தி அறக்கட்டளை மூலம் மெட்ரிகுலேஷன் பள்ளி, பாலிடெக்னிக், அறிவியல் கல்லூரி, இன்ஜினீரியங் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரி, விவசாயக் கல்லூரி என பல்வேறு கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பொறியியல் கல்லூரி தாளாளர் மற்றும் நிர்வாகம் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், சிவசுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த விஜய், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியில் 4ஆம் ஆண்டு படித்து வருகிறார். இவர், தனது கல்லூரி குறித்து விமர்சனம் செய்து முகநூல் பக்கத்தில் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கல்லூரி தாளாளர் செந்தில்குமார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் மாணவர் விஜய்யை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் காயமடைந்த விஜய், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
“கல்லூரி நிர்வாகத்தின் மீது தவறு இருப்பதை சுட்டிக்காட்டவோ, கேள்வி கேட்கவோ கூடாது. அப்படி கேள்வி கேட்டால் அவர்களை குண்டர்களை வைத்து தாக்குவார்களா?. என்ன இது அராஜகம்?. ஆன்மீகம் என்ற பெயரில் இப்படி அப்பாவி மாணவர்களிடம் ஏமாற்றி பணம் பறித்துவிட்டு, அவர்களுக்கு உரிய வசதிகளை செய்து கொடுக்காமல் இருப்பது குறித்து அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. அரசியல்வாதிகளின் முழு ஆதரவும் அவர்களுக்கு இருப்பதால், அவர்கள் எதுசெய்தாலும் அவற்றிலிருந்து தப்பி விடுகிறார்கள்.
அதிகாரிகளும் தங்களுக்குத் தேவையான பணம் கிடைத்தால் போதும், மாணவர்களைப் பற்றியோ, கல்வி பற்றியோ கொஞ்சம் கூட கவலைப் படுவதில்லை. இப்படி இருந்தால் நாடு எப்படி உருப்படும்?” என்று மாணவர்கள் வேதனையோடு கேட்கின்றனர்.
மாணவனைத் தாக்கிய தாளாளர் மற்றும் கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜய்யின் தாயார் பஞ்சவர்ணம் சென்னை மாநகர
காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரை விசாரித்த காவல்துறையினர் காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளருக்கு பரிந்துரை செய்தனர். நடவடிக்கை எடுப்பார்களா? என்பதுதான் கேள்விக் குறி? தமிழக உயர்கல்வித்துறை இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுத்து களங்கத்தைப் போக்க வேண்டும்.

– பூர்வீகா

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response