ஸ்பெஷல்
Now Reading
பிளஸ் 2 தனித் தேர்வர்கள் ஹால்டிக்கெட் ஆன்லைனில்
0

பிளஸ் 2 தனித் தேர்வர்கள் ஹால்டிக்கெட் ஆன்லைனில்

by editor sigappunadaJanuary 24, 2017 4:05 pm

பிளஸ் 2 தனித் தேர்வர்கள் ஹால்டிக்கெட்டை புதன்கிழமை முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறி்ப்பு:

‘வரும் மார்ச், ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை (ஹால் டிக்கெட்) 25-ம் தேதி (புதன்கிழமை) முதல் 29-ம் தேதி வரை அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

ஹால் டிக்கெட் பிரிண்ட் அவுட் என குறிப்பிடப்பட்டிருக்கும் பகுதியை கிளிக் செய்துவிட்டு விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவுசெய்தால் போதும்.

மொழிப் பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு, சிறப்பு மொழி (தமிழ்) பாடத்தில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு மற்றும் செய்முறைத் தேர்வுக்கான தேதி குறித்த விவரத்தைத் தனித்தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பாளரை அணுகி அறிந்து கொள்ள வேண்டும்’ என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response