மாவட்டம்
Now Reading
பிரதமர் மோடிக்கு வி.கே.சசிகலா கடிதம்
0

பிரதமர் மோடிக்கு வி.கே.சசிகலா கடிதம்

by editor sigappunadaJanuary 6, 2017 3:01 pm

master

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர் நினைவு அஞ்சல் தலை மற்றும் நாணயம் வெளியிட வேண்டும் என பிரதமருக்கு அதிமுக பொதுச் செயலாளர் விகே சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.

அதிமுக கட்சியின் நிறுவனத் தலைவரான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா வரும் ஜனவரி 17-ஆம் தேதி துவங்க உள்ளது. இதற்காக ஏற்பாடுகளை அதிமுக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை பிரமாண்டமாகக் கொண்டாட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விரும்பியதாக அதிமுக பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா தனது முதல் உரையில் குறிப்பிட்டார்.

ஜெயலலிதாவின் விருப்பப்படி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை பிரமாண்டமாகக் கொண்டாட அதிமுக திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்திய அரசின் சார்பில் எம்.ஜி.ஆர் நினைவு தபால் தலை மற்றும் நாணயம் வெளியிட வேண்டும் என பிரதமருக்கு அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா கடிதம் எழுதியுள்ளார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response