மாவட்டம்
Now Reading
பிரதமருடன் முதல்வர் ஓபிஎஸ் சந்திப்பு: ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம் இயற்ற வலியுறுத்தல்
0

பிரதமருடன் முதல்வர் ஓபிஎஸ் சந்திப்பு: ஜல்லிக்கட்டு அவசரச் சட்டம் இயற்ற வலியுறுத்தல்

by editor sigappunadaJanuary 19, 2017 10:20 am

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் இன்று (புதன்கிழமை) காலை சந்தித்தார்.

ஜல்லிக்கட்டு நடத்தக் கோரியும், பீட்டாவுக்கு தடை கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்துள்ளது. இந்நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) 50 ஆயிரம் மாணவர்கள் மெரினாவில் திரண்டனர். இதனால் கடற்கரை சாலை மட்டுமல்லாது சென்னை மாநகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில் டிஜிபி, மாநகர காவல் ஆணையர் ஆகியோருடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று காலை அவசர ஆலோசனை நடத்தினார்.

அதைத் தொடர்ந்து அவர், நேற்றிரவு டெல்லி சென்றார். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் ஓபிஎஸ் கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடியை நாளை (இன்று) சந்திக்கிறேன். அப்போது, ஜல்லிக் கட்டு நடத்துவதற்காக அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்துவேன்” என்று தெரிவித்தார்.

இதனையடுத்து இன்று காலை 10.30 மணியளவில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின்போது ஜல்லிக்கட்டு நடத்த அவசரச் சட்டம் இயற்றக்கோரி வலியுறுத்தியதாகவும் தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும் போராட்டங்கள் குறித்து எடுத்துரைத்ததாகவும் தெரிகிறது.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response