உலகம்
Now Reading
பிஜி தீவில் பயங்கர நிலநடுக்கம்!
0

பிஜி தீவில் பயங்கர நிலநடுக்கம்!

by Sub EditorJanuary 4, 2017 11:34 am

பிஜி நாட்டின் தலைநகர் சுவாவில் இருந்து சுமார் 282 கிலோமீட்டர் தூரத்தில் பூமியின் அடியில் 15 கிலோ மீட்டர் ஆழத்தில் உள்ளூர் நேரப்படி காலை 10.52 மணியளவில் (இந்திய நேரப்படி இன்று அதிகாலை சுமார் மூன்றரை மணி) பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுக்கோலில் 7.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தையடுத்து, சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. ஆனால், அடுத்தடுத்த நில அதிர்வுகள் ஏற்படாததையடுத்து, அந்த எச்சரிக்கை சிறிது நேரத்துக்கு பின்னர் திரும்பப் பெறப்பட்டது.

அமெரிக்க புவிசார் ஆய்வு மையம் இந்த நிலநடுக்கத்தை 6.9 அலகுகளாக பதிவு செய்துள்ள நிலையில் இன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் உயிரிழப்பு தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response