மாவட்டம்
Now Reading
பா.வளர்மதிக்கு புதிய அரசு பதவி
0

பா.வளர்மதிக்கு புதிய அரசு பதவி

by editor sigappunadaJanuary 8, 2017 10:07 am

அதிமுக இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் புதிய தலைவராக நியமனம் செய்யப்பட்டார்.

அதிமுக முன்னாள் அமைச்சரான பா.வளர்மதி கடந்த வருடம் ஆகஸ்ட் 26-ஆம் தேதி அதிமுக முன்னாள் பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவால் அதிமுக இலக்கிய அணியின் செயலாளராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை தினந்தோறும் பல்வேறு பிரமுகர்கள் நேரில் சந்தித்து அவரிடம் வாழ்த்து பெற்று செல்கின்றனர். இந்நிலையில், அதிமுக இலக்கிய அணியின் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் புதிய தலைவராக நேற்று நியமனம் செய்யப்பட்டார்.

இதற்கான உத்தரவை தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் சபிதா வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளர் வி.கே. சசிகலாவை, பா.வளர்மதி தனது குடும்பத்தினருடன் நேரில் சென்று சந்தித்து ஆசி பெற்றார்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response