க்ரைம்
Now Reading
பாஸ்போர்ட்டில் போலி முத்திரை; கொழும்பு செல்ல முயன்றவர் கைது!
0

பாஸ்போர்ட்டில் போலி முத்திரை; கொழும்பு செல்ல முயன்றவர் கைது!

by Sub EditorJanuary 2, 2017 6:41 pm

திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு விமானம் இயக்கப்படுகிறது. நேற்று காலை இந்த விமானத்தில் செல்லவிருந்த பயணிகளை, வான்நுண்ணறிவு பிரிவு சுங்க அதிகாரிகள் மற்றும் இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கொழும்பு வழியாக ரியாத் செல்லவிருந்த பயணி ஒருவரின் பாஸ்போர்ட்டில் சிங்கப்பூரில் ஒரு வருடம் தங்கி வேலை பார்த்ததாக போலி முத்திரை பதிவாகியிருந்தது தெரிந்தது. இதையடுத்து அந்த வாலிபரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் புதுகை மாவட்டம், கீரனூர் அருகேயுள்ள அண்டகுளத்தைச் சேர்ந்த முகமதுயாசின்(29) என தெரிய வந்தது. இவர் 8ம் வகுப்பு வரை படித்துவிட்டு டிரைவராக இருந்திருக்கிறார். கடந்த 2012ம் ஆண்டு முதல் 2013 வரை 2 ஆண்டுகள் வேலை பார்த்துள்ளார். ஆனால், 3 வருடம் வேலை பார்த்தால் மட்டுமே இசிஎன்ஆர் சான்று வாங்கலாம். 10ம் வகுப்புக்கும் குறைவாக படித்து, இந்த சான்று வாங்காதவர்கள் இந்தியாவிலிருந்து நேரடியாக வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல முடியாது.

வேலைக்கு போக விரும்பினால் அவர்கள் இமிகிரேசன் அதிகாரிகளிடம் உரிய பிஒஇ சான்று பெற வேண்டும் அல்லது வெளிநாட்டு நிறுவனம் வேலை நியமன கடிதம் கொடுத்திருக்க வேண்டும். முகமது யாசின் 2 வருடமே பணியாற்றியதால், இசிஎன்ஆர் சான்று பெற ஒரு வருடம் குறைவாக இருந்தது. இதற்குதான் ஏஜென்ட் உதவியுடன் மூன்றாவதாக ஒரு வருடம் பணியாற்றியதாக பாஸ்போர்ட்டில் போலிமுத்திரை பதித்துள்ளார். இதனால்தான் அதிகாரிகளிடம் சிக்கியது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து விமானநிலைய அதிகாரிகள், முகமதுயாசினை ஏர்போர்ட் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிந்து, அவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் போலி முத்திரைக்கு உடந்தையாக இருந்த ஏஜென்ட்டை தேடி வருகின்றனர்.

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response