சினிமா
Now Reading
பாலா – ஜோதிகா கூட்டணியில் இணைந்த ஜி.வி.பிரகாஷ்
0

பாலா – ஜோதிகா கூட்டணியில் இணைந்த ஜி.வி.பிரகாஷ்

by editor sigappunadaFebruary 27, 2017 11:55 am

பாலா இயக்கத்தில் ஜோதிகா நடிக்கவுள்ள புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஜி.வி.பிரகாஷ்

‘தாரை தப்பட்டை’ படத்தைத் தொடர்ந்து புதிய படத்துக்கான கதை விவாதத்தில் ஈடுபட்டு வந்தார் இயக்குநர் பாலா. இதில் யுவன் மற்றும் புதுமுகம் பிரகதி நடிக்கவிருப்பதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். ஆனால், அப்படம் தொடங்கப்படவில்லை.

பாலா இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் ஜோதிகா நடிப்பது உறுதியாகியுள்ளது. இப்படத்தை ஈயான் ஸ்டூடியோஸ் மற்றும் பி ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கவுள்ளது. இளையராஜா இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மார்ச் மாதம் முதல் ஜோதிகாவின் காட்சிகளை படமாக்க தொடங்குகிறார் பாலா. சில நாட்கள் கழித்து படக்குழுவினரோடு ஜி.வி.பிரகாஷ் இணைய திட்டமிட்டுள்ளார்.

ஜி.வி.பிரகாஷ் – ஜோதிகா இருவரையும் வைத்து போட்டோ ஷூட் ஒன்றை முடித்துள்ளார் பாலா. படப்பிடிப்புக்கு முன்பாக பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.

ஜி.வி.பிரகாஷ் – ஜோதிகா ஆகியோருடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

இதையும் படிச்சிருங்க !
பைக்கில் மதுவிற்பனை, கண்டுகொள்ளாத போலீஸ் -   டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வரும் நிலையில் கள்ளச்சந்தையில் மதுவிற்பனை ஜோராக நடந்து வருகிறது. விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 9 இடங்களில் அரசு Read More

தங்களின் கருத்து ?
மகிழ்ச்சி
0%
வருத்தம்
0%
கோபம்
0%
சிரிப்பு
0%
நக்கல்
0%
விருப்பம்

Leave a Response